உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை நடுவே விழுந்து கிடக்கும் பேரிகார்டுகளால் விபத்து அச்சம்

சாலை நடுவே விழுந்து கிடக்கும் பேரிகார்டுகளால் விபத்து அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்,வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே காரணித்தாங்கல் வரை ஒரகடம் காவல் கட்டு பாட்டில் உள்ளது. காரணி தாங்கலில் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித் தல் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வழியாக, ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகமாக சென்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் இரவு நேரத்தில் அதிவேகமாக சென்ற லாரி மோதியதில், பேரிகார்டுகள் சேதமாகி விழுந்தன.இதையடுத்து, சேதமானபேரிகார்டுகளை அப்புறப்படுத்தி, புதிதாக அமைக்க போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒரு மாதத்திற்கு மேலாக சாலை நடுவே அபாயகரமாக உள்ள பேரிகார்டுளில், இரவு நேரத்தில்செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவருகின்றனர்.எனவே, சோதனைச் சாவடியில் சாலை நடுவே உடைந்து விழுந்துகிடக்கும் பேரிகார்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை