உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சார்- பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த செடி, கொடிகளால் அச்சம்

சார்- பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த செடி, கொடிகளால் அச்சம்

வாலாஜாபாத், வாலாஜாபாதில், பேருந்து நிலையம் அருகே சார் - பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், வீட்டு மனைகள் மற்றும் விளை நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்குமான பதிவுகள் மேற்கொள்ள தினசரி இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், இந்த அலுவலக கட்டடத்தை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் பலரும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. சார் - பதிவாளர் அலுவலக கட்டடத்தையொட்டிய பகுதிகளில் ஆள் உயர செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.செடி, கொடிகளுக்குள் விஷ ஜந்துக்கள் இருந்து, ஆபத்து ஏற்படுத்த கூடும் என, அலுவலகத்திற்கு வருவோர் அச்சப்படும் நிலை உள்ளது.எனவே, வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்தை பராமரிக்கவும், கட்டடத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றவும் வேண்டும் என, சமூக ஆர்வலர் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ