உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உர விழிப்புணர்வு முகாம்

 உர விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம்: உர மேலாண்மை குறித்து, விவசாயிகள் இடையே விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கம்பராஜபுரத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை ஐஸ்வர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் அதற்கேற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். நில உடமை பதிவு குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதில், 'அட்மா' என அழைக்கப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ராணிசந்திரா உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ