மேலும் செய்திகள்
பெரியகயப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் வருமா?
24-Mar-2025
சமுதாய நலக்கூட சுவர் இடிந்து 3 வாகனங்கள் சேதம்
12-Mar-2025
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, வைப்பூர் கிராமத்தில் 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை படப்பை, வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால், ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டி தர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தனியார் நிறுனத்தின் பங்களிப்பில், சி.எஸ்.ஆர்., எனும் தனியார் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய நலக்கூடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.புதிய சமுதாய நலக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா, ஊராட்சி தலைவர் சுமதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தனியார் தொழிற்சாலையின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
24-Mar-2025
12-Mar-2025