மேலும் செய்திகள்
கண் மருத்துவ முகாம் 250 பேர் பங்கேற்பு
14-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும் 10ம் தேதி, காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள், பரிசோதனை செய்கின்றனர். கண்புரை நோய் உள்ளோர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்படும். போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரை, அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 98423 46046, 94432 69946, 97914 08768, என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
14-Jul-2025