உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தைல டப்பா விழுங்கிய குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

தைல டப்பா விழுங்கிய குழந்தை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மேல்கதிர்பூர் அடுத்த மேட்டுப்பாளையம் ஆளவந்தார்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜித் - டயானா தம்பதி. இவர்களுக்கு, குகணேஷ் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது.நேற்று, வீட்டில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை, சிறிய அளவிலான தைல டப்பாவை விழுங்கி உள்ளது. பின், வாயில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அழுத குழந்தையை பெற்றோர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தொண்டைக்கும், மூச்சு குழலுக்கும் நடுவே தைலம் டப்பா சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.அதன் பின், காது, மூக்கு தொண்டை மருத்துவர் மணிமாலா மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் பாலாஜி ஆகியோர் இணைந்து, 1 மணி நேரம் போராடி, தைலம் டப்பாவை வெளியே எடுத்தனர்.தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக, காஞ்சிபுரம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !