உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேவரியம்பாக்கத்தில் சுகாதார நிலையம் திறப்பு

தேவரியம்பாக்கத்தில் சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத்:தேவரியம்பாக்கத்தில், 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தேவரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தை சுற்றியுள்ள மக்களுக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 15 கி.மீ., துாரத்தில் உள்ள அய்யம்பேட்டையில் செயல்பட்டு வந்தது.இதனால், அவசரக்கால சிகிச்சைக்கு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல இயலாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதை தவிர்க்க இந்த கிராமங்களின் மையப் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த கோரி வந்தனர். அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில், 1.20 கோடி ரூபாய் செலவில் தேவரியம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வந்தது.இதற்கான பணிகள் முழுமை பெற்றதையடுத்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.தேவரியம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை