உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேளிங்கப்பட்டரையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

வேளிங்கப்பட்டரையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிபணிக்குழு தலைவர் வார்டில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டில் கவுன்சிலர் கார்த்தி, மாநகராட்சி பணி குழு தலைவராக உள்ளார். இவரது வார்டுக்கு உட்பட்ட வேளிங்கப்பட்டரை சக்தி நகரில், அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பல நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு புழுக்கள் அதிகளவு உள்ளது. இதனால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், மாநகராட்சி பணிக்குழு தலைவர் வார்டில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வேளிங்கப்பட்டரை சக்தி நகரில், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி