காஞ்சி புகார் பெட்டி கூட்டமாக திரியும் நாய்களால் தொல்லை
பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதி, காவலர் குடியிருப்பு அருகில், 25க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், விபத்து ஏற்படுகிறது.இதனால், சிறுவர்கள், பெண்கள், முதியோர் சாலையில் நடமாட அச்சப்படுகின்றனர். சைக்கிள் மற்றும் டூ - வீலரில் செல்வோரை நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ரஜினிகாந்த்,காஞ்சிபுரம்.