மேலும் செய்திகள்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
30-Mar-2025
சின்ன காஞ்சிபுரம், பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில், மழைநீர் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. இக்குழியின் மீது மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் உடைந்த நிலையில் உள்ளது.இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் மாணவியர், மழைநீர் உறிஞ்சு குழியில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, உடைந்த நிலையில் உள்ள உறிஞ்சு குழி கான்கிரீட் மூடியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,சின்ன காஞ்சிபுரம்.
30-Mar-2025