உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மஞ்சள் நீர் கால்வாய் வழித்தடங்களை துார்வார உத்தரவு

காஞ்சி மஞ்சள் நீர் கால்வாய் வழித்தடங்களை துார்வார உத்தரவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், அமைக்கப்பட்ட மஞ்சள்நீர் கால்வாய், புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.இக்கால்வாய்க்கு 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய் துார்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை என்ற புகார் எழுந்தது.இந்நிலையில், ‛பெஞ்சல்' புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் பெய்த கனமழையால், மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள திருக்காலிமேடு அருந்ததியர்பாளையத்தில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தினர், மழைநீரை வெளியேற்றினர்.இந்நிலையில், நேற்று காலை, காஞ்சிபுரம் சப் - -கலெக்டர் ஆஷிப் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் திருக்காலிமேடு, நேதாஜி நகர் வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாயில் மழைநீர் செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்தனர்.அப்போது, திருக்காலிமேடு, நேதாஜி நகரை இணைக்கும் சிறுபாலம் அருகிலும் மற்றும் நேதாஜி நகர் ஒட்டியுளள பகுதியில், கால்வாயில் மண்டிகிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் புதர்போல மண்டிகிடந்த செடி, கொடிகளையும் அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் கால்வாய் துார்வாரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி