காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
காஞ்சிபுரம் அடுத்த, சின்னையன் சத்திரம் கிராமம் - அத்திவாக்கம் மற்றும் சிறுவேடல் - சிங்காடிவாக்கம் இடையே, பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான நான்குவழிக் கூட்டுச் சாலை உள்ளது.இந்த சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு வசதி அறவே இல்லை. இதனால், அச்சம் நிலவி வருகிறது. எனவே, நான்கு முனை சந்திப்பு சாலையில், உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.- -ஆர். கோபால்,சின்னையன்சத்திரம்.