/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றப்படுமா?
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பாடிச்சேரி பகுதியில், 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதடைந்து சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளது. இரும்பு கம்பிகள் தெரியும் நிலையில் உள்ள மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும் விழும் அபத்தான நிலையில் உள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மின் வாரிய அதிகாரிகள் சேதமான மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அச்சுதன், வடமங்கலம்.