காரை கிரிக்கெட் அணி வெற்றி
காரை:பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழாவையொட்டி காரையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் காரை அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம், பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழாவையொட்டி, காரை ஊராட்சியில், மூன்று வாரங்களாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் காரை, வதியூர், திருப்பனங்காடு உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், காரை மற்றும் வதியூர் கிரிக்கெட் அணியினர் மோதினர். இதில், முதலில் பேட்டிங் செய்த வதியூர் அணியினர் 6 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 29 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய காரை அணியினர் நான்காவது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன் எடுத்தனர். இதன் மூலம், காரை அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் பரிசு வழங்கப்பட்டது.