செவ்வந்தீஸ்வரர் கோவிலில் ஜூன் 5ல் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் காமாட்சி அம்பாள் சமேத செவ்வந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பரம்பரை தர்மகர்தாக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, வல்லப கணபதி, வாயு பகவான், சிவதுர்கை, காலபைரவர் உள்ளிட்ட சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்குகிறது.வரும் 5ம் தேதி, காலை 7:30 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலச புறப்பாடும், 7:45 மணிக்கு கோபுரத்திற்கும், தொடர்ந்து விநாயகர், சிவதுர்க்கை, வாயு பகவான், அங்காரகன், கால பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும், செவ்வந்தீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.அதை தொடர்ந்து மஹா தீபாராதனையும், மஹா அபிஷேகமும் நடக்கிறது.