உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருட வாகனத்தில் உலா வந்த நவநீதகிருஷ்ண பெருமாள்

கருட வாகனத்தில் உலா வந்த நவநீதகிருஷ்ண பெருமாள்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நவநீத கிருஷ்ண பெருமாள், கருட வாகனத்தில் நேற்று உலா வந்தார். உத்திரமேரூர் பேரூராட்சி, கருணீகர் தெருவில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான கருட சேவை உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், காலை 8:00 மணிக்கு நவநீதகிருஷ்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து, பஜார் வீதி, பேருந்து நிலையம், மாட வீதி வழியாக வீதியுலா நடந்தது. பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். அதேபோல, பெருங்கோழி கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலிலும் கருட சேவை உத்சவம் சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை