உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்டலம் கிராமவாசிகள் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்டலம் கிராமவாசிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், தண்டலம், தண்டலம் காலனி, பள்ளம்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில், குடியிருப்புகளுக்கு, ஒருமுனை மின் இணைப்பு மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின் இணைப்பு என, மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, மின் சப்ளை விநியோகம் செய்யப்படுகிறது.சில தினங்களாக, குறைந்த மின்னழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.இதனால், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. மேலும், விவசாயத்திற்கு தண்ணீரை பாய்ச்ச முடியவில்லை என, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, தண்டலம்கிராமத்தைச் சேர்ந்தவிவசாயிகள் கூறியதாவது:குறைந்த மின்னழுத்த சப்ளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என, மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் குடியிருப்பினர் மற்றும் விவசாயிகள் அவதிப்பட வேண்டி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை