கிரிக்கெட் போட்டி மதுார் அணி முதலிடம்
மதுார், உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிரிக்கெட் அணி சார்பில், மே தினத்யொட்டி, கடந்த 1ம் தேதி முதல், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வந்தது.கார்க் பந்திலான 8 ஓவர்கள் கொண்டு, நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில், சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 கிரிக்கெட் அணியினர் மோதினர்.போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், முதல் நான்கு இடங்களை பிடித்த கிரிக்கெட் அணிகளுக்கு மதுார் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி மற்றும் துணை தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற அணிகளில், மதுார் கிரிக்கெட் அணி முதல் இடம் பிடித்தது. அந்த அணிக்கு 15,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் மதிப்பிலான கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற பெரியநத்தம் பகுதி கிரிக்கெட் அணிக்கு 10,000 ரூபாய், 5,000 ரூபாய் மதிப்பிலான கோப்பை வழங்கப்பட்டது.மூன்றாம் இடம் பிடித்த நெல்வேலி கிரிக்கெட் அணிக்கு 5,000 ரூபாய் மற்றும் கோப்பை; நான்காம் இடம் பிடித்த பொற்பந்தல் கிரிக்கெட் அணிக்கு 3,000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.மேலும், தொடர் ஆட்ட நாயகன் மற்றும் ஹாட்ரிக் சிக்ஸ், விக்கெட் எடுத்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.