உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கணபதி, முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கணபதி, முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் தென்கரையில் ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கும், மூலவர் ஜெயகணபதி, பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மாலையில் ஜெயகணபதி, பாலமுருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ