உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி பலரிடம் மோசடி செய்தவர் கைது

வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி பலரிடம் மோசடி செய்தவர் கைது

குன்றத்துார்: குன்றத்துார் அருகே, கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ், 44. சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவருக்கு, கெருகம்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு இடங்களில், சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை லீசுக்கு விட உள்ளதாக, ஆன்லைனில் விளம்பரம் செய்தார். இதை பார்த்த பலர், ஸ்ரீவத்ஸை தொடர்பு கொண்டனர். இதில், 20 நபர்களிடம், 60 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று, வீட்டை லீசுக்கு கொடுக்காமல், ஸ்ரீவத்ஸ் மோசடி செய்து தலைமறைவானார். பாதிக்கப்பட்டோர், ஸ்ரீவத்ஸை தேடி வந்த நிலையில், மாங்காடு அருகே கொழுமணிவாக்கம் பகுதியில் தங்கியிருந்த ஸ்ரீவத்ஸை பிடித்த அவர்கள், மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஸ்ரீவத்ஸை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ