மண்ணடியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சாலவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் கிராமத்தில், பழமையான மண்ணடியம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவில் உள்ள இக்கோவிலை மண்டபத்துடன் கூடிய விமான கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் முடிவு செய்தனர்.அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் கட்டுமானப்பணி சமீபத்தில் முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 17ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.மாலை 6:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு யாத்ரா தானமும், 9:45 மணிக்கு கடம் புறப்பாடும், அதை தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.