உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு சங்கரா பல்கலையில் மாரத்தான் போட்டி
ஏனாத்துார்:காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி காஞ்சிபுரத்தில் நடந்தது. இப்போட்டியை பல்கலை துணைவேந்தர் டாக்டர் ஜி.ஸ்ரீனிவாஸு, இணை துணைவேந்தர் டாக்டர் வசந்த்குமார் மேத்தா ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., சிறுவர்களுக்கு 3 கி.மீ., என, மூன்று பிரிவுகளாக நடந்த மாரத்தான் போட்டியில், 989 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பல்கலை பதிவாளர் டாக்டர் ஸ்ரீராம், அறிவியல் புல தலைவர் டாக்டர் வெங்கட்ரமணன் ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குநர் டாக்டர் குணாளன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.