உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சி முக்கிய பணிகளுக்கு நிதி துணை முதல்வரிடம் மேயர் கோரிக்கை

மாநகராட்சி முக்கிய பணிகளுக்கு நிதி துணை முதல்வரிடம் மேயர் கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனம், பாதாள சாக்கடை திட்டம் மறுசீரமைப்பு, எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி தேவை என, துணை முதல்வர் உதயநிதியிடம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி, மாவட்ட வாரியாக வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதோடு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்த அவர், 253 கோடி ரூபாய் மதிப்பில், 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறந்து வைத்தும், புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கலெக்டர் அலுவலகத்தில், துறை அதிகாரிகளுடன் அரசின் திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், திட்டங்கள் பற்றி அவர் கேட்டறிந்தார். அப்போது, மாநகராட்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி, துணை முதல்வர் உதயநிதியிடம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கோரிக்கை விடுத்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு போன்ற பகுதிகளுக்கு கூடுதலாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்த வேண்டும்; காஞ்சிபுரத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் சீரமைப்பு; அன்னை அஞ்சுகம் கட்டடம் கட்டுவதற்கான கூடுதல் நிதி, கழிவுநீர் அடைப்பு நீக்கும் சூப்பர் சக்கர் வாகனம் உள்ளிட்ட கோரிக்கைகள் அவரிடம் முன் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை