ஈஞ்சம்பாக்கத்தில் நாளை மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மருத்துவ முகாம் நாளை நடக்க உள்ளது. இந்த முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதய மருத்துவம், பல், தோல், கண், காது, மன நலன் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஈஞ்சம்பாக்கம் சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று, பல்வேறு பரிசோதனைகளை செய்து பயன் பெறலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.