உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நடமாடும் சோதனைச்சாவடி வாகனம் அறிமுகம்

 நடமாடும் சோதனைச்சாவடி வாகனம் அறிமுகம்

காஞ்சிபுரம்: கிராமங்களின் நடக்கும் திருவிழா பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, நடமாடும் சோதனைச்சாவடி வாகனத்தை, அரக்கோணம் உதவிக் கோட்ட காவல் நிலையம் அறிமுகப்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உதவி காவல் கோட்டம் சார்பில், அரக்கோணம் தாலுகா, நெமிலி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களில், ஆடித் திருவிழா, பொங்கல் விழா உள்ளிட்ட பல்வேறு விதமான திருவிழாக் களை கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற விழாக் காலங்களில் மக்களுக்கு, அந்தந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வரும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்பார்வையிடுவர். இதுபோன்ற நேரங்களில், வீடுகள், கோவில்கள், அரசு கட்டடங்களை நாட வேண்டி உள்ளது. சில நேரங்களில், பாதுகாப்புக்கு செல்லும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் ஓய்வு எடுக்கவும், கண்காணிக்கவும் சிரமமாக இருந்து வருகிறது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, அரக்கோணம் காவல் உதவிக்கோட்டம் சார்பில், நடமாடும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கணினி அறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உள்ளன. பாதுகாப்பு நலன் கருதி தேவைப்படும் கிராமங்களுக்கு, எளிதாக வாகனத்தில் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, பிரச்னை இருக்கும் கிராமங்களில் திருவிழாக்களை கண்காணிக்க சவுகரியமாக இருக்கிறது என, அரக்கோணம் காவல் உதவிக்கோட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ