உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

காஞ்சிபுரம்:குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் சீனியர் மேலாளர் சுந்தரேச அய்யர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குஜராத்தின் ஆமதாபாத்தில், விமானம் விபத்துக்குள்ளாகி, 241 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து உள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய, மடாதிபதிகள் இருவரும், காஞ்சி காமாட்சியம்மனை பிரார்த்தனை செய்தனர்.உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய மடாபதிபதிகளின், அருளானையின்படி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ