உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண்ணடியன்குடிசை சாலை வளைவால் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

கண்ணடியன்குடிசை சாலை வளைவால் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்: அவளூர் - தம்மனுார் சாலையில், கண்ணடியன்குடிசை அருகே உள்ள அபாயகரமான சாலை வளைவால் வாகன ஓட்டி கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். வாலாஜாபாத் அடுத்த அவளூரில் இருந்து, கண்ணடியன்குடிசை வழியாக தம்மனுார் செல்லும் சாலை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தோர், இச்சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், கண்ணடியன்குடிசை அருகே, அங்கம்பாக்கம் பிரிவு சாலையில், அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதி குறித்து எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, கண்ணடியன்குடிசை அபாயகரமான சாலை வளைவில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு வேகத்தடை ஏற்படுத்த, அப்பகுதி வாகன ஓட்டிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ