லிங்காபுரம் குறுகிய சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வாலாஜாபாத்:லிங்காபுரம் சாலை குறுகியதாக உள்ளதால், விபத்தில் சிக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், சங்காபுரத்தில் இருந்து, லிங்காபுரம் வழியாக, தேவரியம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.சுற்றுவட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், விவசாயம் சார்ந்த பணிகளுக்காக இந்த சாலை வழியாக டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் நெல் அறுவடை இயந்திர வாகனம் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன.லிங்காபுரத்தில் இருந்து, தேவேரியம்பாக்கம் வரையிலான 3 கி.மீ., சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. விபத்தில் சிக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.எனவே, குறுகியதான இச்சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.