உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 8 கிலோ கஞ்சா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது

குன்றத்துார்:தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பரிவு போலீசார், வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இக்பால் உசேன், 21, என்பவரை பிடித்து விசாரித்தனர்.இதில், பல்லாவரத்தில் ஜூஸ் கடையில் பணியாற்றும் இக்பால் உசேன், விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்கு சென்று, கஞ்சா வாங்கி வந்து குன்றத்துார் பகுதியில் விற்று வந்துள்ளார்.இதையடுத்து, இக்பால் உசேனிடம் இருந்த, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை