மேலும் செய்திகள்
வீரஆஞ்சநேய சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்
29-Sep-2024
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் சி.என்.அண்ணாதுரை தெருவில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபை உள்ளது.இங்கு, திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா, வரும் 5ம் தேதி. காலை 5:30மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்குகிறது.தொடர்ந்து, சன்மார்க்கக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆராதனையும், காலை 8:30 மணிக்கும், மதியம் 12.00 மணிக்கும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனையும், தொடர்ந்து வள்ளலாரின் மார்க்கநெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றுகிறார்.இரவு 7:15 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனமும், பக்தர்களுக்கு ஆடை வழங்கும் நிகழ்வும், இரவு 7:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட உள்ளது.
29-Sep-2024