உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கச்சபேஸ்வரர் கோவிலில் 17ல் கடை ஞாயிறு விழா துவக்கம்

கச்சபேஸ்வரர் கோவிலில் 17ல் கடை ஞாயிறு விழா துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.கடைஞாயிறு விழாவில், சிறுவர்கள், பெரியவர்கள், என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.அதன்படி கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை மறுநாள், முதல் வார கார்த்திகை, கடை ஞாயிறு விழா துவங்குகிறது. தொடர்ந்து நவ., 24, டிச., 1, 8, 15 என, ஐந்து வாரமும் கடைஞாயிறு விழா நடக்கிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி