பெண்ணை மிரட்டிய ஊராட்சி தலைவர்: 3 பேர் மீது வழக்கு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த தர்மராஜாம்பேட்டை பிரதான தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகள் ஜனனி, 24. இவர், தன் சகோதரியின் உறவினரும், பழையசீவரம் ஊராட்சி தலைவர் மகாலட்சுமியின் மகனுமான கரண்கார்த்திக், 25, என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழங்கி வந்த நிலையில், ஜனனியை திருமணம் செய்ய கரண்கார்த்திக் மறுத்துள்ளார்.பழையசீவரத்தில் உள்ள கிரண்கார்த்திக் தாய் வீட்டிற்கு ஜனனி சென்றார். அப்போது, கிரண்கார்த்திக்கின் தந்தை நீலமேகம் மற்றும் தாய் மகாலட்சுமி ஆகியோர் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஜனனி அளித்த புகாரின்படி, கிரண்கார்த்திக், அவரது தந்தை நீலமேகம், ஊராட்சி தலைவரும் தாய் மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.