உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

பனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பனப்பாக்கம் அருகே, கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தம் உள்ளது. வட்டம்பாக்கம், பனப்பாக்கம், வைப்பூர், எறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், பொதுமக்கள் நாள்தோறும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தவிர, எறையூர், வைப்பூர் பகுதிகளில் இயங்கிவரும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வந்து செல்கின்றனர்.தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பயணியர் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அங்கு இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைத்து தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ