லாரி - பஸ் மோதல் பயணியர் தப்பினர்
செய்யூர், செய்யூர் அருகே எல்லையம்மன் கோவிலில், அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று, 10க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று காலை, இ.சி.ஆர்., சாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்றது.செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவில் அருகே சென்ற போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, எதிர் திசையில் வந்த லாரியில் முன்பகுதியில், மோதி விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணித்த பயணியர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட அனைவரும், காயமின்றி தப்பினர்.அரசு பேருந்தில் வந்த பயணியரை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.