உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, தினமும் 500க்கும்மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், சென்னை செல்லும்பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம், பொது கழிப்பறை மற்றும்வேலுார் பேருந்துநிறுத்தம் அருகே, சமீபத்தில் பெய்த மழையின்காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலைஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டு மின்றி, பேருந்தில் ஏற செல்லும் பயணியர்கவனக்குறைவாக பள்ளத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை