மேலும் செய்திகள்
குட்கா விற்ற பெண் கைது
29-Aug-2025
உத்திரமேரூர்:மேனலுார் ஊராட்சி, பாரதிபுரத்தில் ரேஷன் கடை அமைக்க உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். உத்திரமேரூர் ஒன்றியம், மேனலுார் கிராமத்தில் அரசாணிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள, நீர்வரத்து கால்வாய் மீது, 3.50 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மேனலுார் ஊராட்சி தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். அப்போது, மேனலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரிடம், தங்கள் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, பாரதிபுரத்தில் ரேஷன் கடை விரைவில் அமைக்கப்படும் என, மக்களிடம், எம்.எல்.ஏ., சுந்தர் உறுதி அளித்தார்.
29-Aug-2025