உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் சுவரில் வளரும் செடிகளால் வலுவிழக்கும் அபாயம்

கோவில் சுவரில் வளரும் செடிகளால் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சிபுரம்:கங்கை கொண்டேஸ்வரர் கோவில் சுவரில் வளர்ந்து வரும் அரச மரச் செடிகளால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு வலுவிழக்கும் அபாய நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், கங்கை கொண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். குறிப்பாக, கோவில் கட்டடத்தின் மீது அரச மரச்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோவில் சுவரில் வளர்ந்து வரும் அரசமரச் செடிகளை அகற்றி, முறையான பராமரிப்பு செய்ய வேண்டும் என, பக்தர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி