உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மணிகண்டீஸ்வரர் கோவிலில் உழவார பணி

மணிகண்டீஸ்வரர் கோவிலில் உழவார பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 1998ல் துவக்கப்பட்ட அப்பர் இறைபணி அறக்கட்டளையில், 100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர் மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில், கோவில் மற்றும் தெப்ப குளங்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வந்தனர். அதன்படி, சின்னகாஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளாக கூரையில் படிந்த ஒட்டடை அடிக்கப்பட்டது. கோவில் பிரகாரம், தெப்பகுளத்தில் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி