உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சூரியா முன்னிலை வகித்தனர்.உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகளை வழங்கினார்.பின், அவர் பேசுகையில், 'உத்திரமேரூர் வட்டாரத்தில் 186 அங்கன்வாடி மையங்களில், 3,000 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, 2 - 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆரோக்கியமான உணவுடன்கூடிய கல்வி அளிக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை