உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடம் சர்வீஸ் சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர்

ஒரகடம் சர்வீஸ் சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர்

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியாக, வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இரு தினங்களாக பெய்த மழையினால், ஒரகடத்தில் இருந்து, வண்டலுார் செல்லும் சர்வீஸ் சாலையில், மழைநீர் குளம் போல் தேங்கியது.இந்த சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், சாலையில் தேங்கும் மழைநீரால், சர்வீஸ் சாலை சேதமடைந்து வருகிறது. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, அப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ