உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரும்புலியூர் வைகுண்டவாசர் கோவிலில் புனரமைப்பு பணி

அரும்புலியூர் வைகுண்டவாசர் கோவிலில் புனரமைப்பு பணி

அரும்புலியூர்:அரும்புலியூர், வைகுண்டவாச பெருமாள் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், 2009ல் குட முழுக்கு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து, இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.இதனிடையே, கோவில் கட்டடத்தின் பல பகுதிகள் சிதிலம் அடைந்து இருந்தது. இதனால், 16 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.இதற்காக சில மாதங்களாக கோவிலில் புதிதாக மண்டபம் கட்டுதல், பழுதான கட்டட பகுதிகள் சீர் செய்தல், சிமென்ட் சிலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வரும் ஜூலை மாதம் 14ம் தேதி, காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ