இரட்டை தாளீஸ்வரர் கோவில் தெரு சிமென்ட் சாலையாக்க கோரிக்கை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, பஜார் வீதியில் இருந்து பிரிந்து செல்லும் இரட்டைத் தாளீஸ்வரர் கோவில் சந்துத் தெரு உள்ளது. செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியினர், இத்தெரு வழியாக வந்து பஜார் வீதி, அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மழை நேரங்களில் இந்த தெருப் பகுதி சேறாக காட்சி அளிக்கிறது. அச்சமயம் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இரட்டை தாளீஸ்வரர் கோவில் சந்துத் தெருவை சிமென்ட் சாலையாக சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.