உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் இரு இடங்களில் சிக்னல் அமைக்க கோரிக்கை

காஞ்சியில் இரு இடங்களில் சிக்னல் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், எஸ்.வி.என்.,தெருவில், வாகன நெரிசலை குறைக்க, இரு இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என, பெற்றோர், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் நகரில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பட்டுச்சேலை வாங்க வரும் வெளியூர் வாடிக்கையாளர்களால், நகரின் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் , வேலைக்கு செல்பவர்களை காட்டிலும், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், பெற்றோர் அன்றாடம் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் நகரில் மூங்கில் மண்டபம், ரெட்டை மண்டபம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே சிக்னல் செயல்படுகின்றன. அடுத்தகட்டமாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.என்.,தெருவில் சிக்னல் அமைக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி செல்லும் நேரத்தில், எஸ்.வி.என்.,தெருவில் கடுமையான நெரிசல் அன்றாடம் ஏற்படுகிறது. இதனால், ஏகாம்பரநாதர் கோவில் செல்லும் வளைவிலும், கிருஷ்ணன் தெரு துவங்கும் இடத்திலும் என இரு இடங்களில், போலீசார் சிக்னல் அமைக்க வேண்டும் என, பெற்றோர், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை