உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் கால்வாய் தளத்தை பழுது பார்க்க கோரிக்கை

மழைநீர் கால்வாய் தளத்தை பழுது பார்க்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியில், சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் இருந்து பல்லவர்மேடு மேற்கு பகுதிக்கு செல்லும் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், புதுப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே, கால்வாய் மீது மூடப்பட்டுள்ள, 'கான்கிரீட்' தளம் நான்கு இடங்களில் உடைந்து கால்வாய் திறந்து கிடக்கிறது. சாலையின் தரைமட்டத்தில் கால்வாய் திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் இச்சாலையோரம் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மழைநீர் கால்வாய் தளத்தை மூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை