உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் பாலாற்று பாலத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

வாலாஜாபாத் பாலாற்று பாலத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - அவளூர் பாலாற்று தரைப்பாலத்திற்கு முழுமையான தடுப்பு சுவர் வசதி இல்லாததால், அப்பகுதி வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் உள்ளது. வாலாஜாபாத் ரவுண்டனா அருகே துவங்கி, பாலாற்றின் குறுக்கே அவளூர் சென்றடையும் தரைப்பாலம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் இந்த பாலாற்று தரைப்பாலம் வழியாக, வாலாஜாபாத் சென்று அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் போதுமான தடுப்புகள் ஏற்படுத்தாமல் இடைவெளி விட்டு கான்கிரீட் துாண்கள் தடுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தடுப்பு வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பானதாக இல்லை. மேலும், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கின் போது தண்ணீரை வேடிக்கை பார்ப்போர் தடுப்பு இல்லாததால் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, வாலாஜாபாத் - அவளூர் பாலாற்று தரைப்பாலம் மீது முழுமையான தடுப்பு சுவர் ஏற்படுத்தி விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ