உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிழிந்த தொங்கும் பேனரால் காஞ்சியில் விபத்து அபாயம்

கிழிந்த தொங்கும் பேனரால் காஞ்சியில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளான காமராஜர் வீதி, செங்கழுநீரோடை வீதி, மேற்கு ராஜ வீதி, விளக்கடிகோவில் தெரு, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் உள்ள கட்டடங்களின் மீது பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், ‛பெஞ்சல்' புயலின்போது பலத்த காற்று வீசியதில், காமராஜர் வீதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பேனர் கிழிந்த நிலையில் இருந்தது.இந்நிலையில், கிழிந்த பேனரின் ஒரு பகுதி நேற்று காலை, அவ்வழியாக செல்லும் மின் கம்பியின் மீது விழுந்தது. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் மின் கம்பியின் விழுந்திருந்த பேனரின் ஒரு பகுதியை அகற்றினர்.மீதமுள்ள பேனர் இரும்பு சட்டத்தில் ஊசலாடியபடி உள்ளது. அது, பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது, அவை கிழிந்து சாலையில் விழுந்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் கிழிந்து தொங்கும், ‛பிளக்ஸ் பேனரை' அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி