உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் தேக்கத்தால் தொற்று பரவும் அபாயம்

கழிவுநீர் தேக்கத்தால் தொற்று பரவும் அபாயம்

வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், பெரிய காலனி படவேட்டம்மன் கோவில் தெருவின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் குறிப்பிட்ட துாரம் வரை மட்டும் கட்டப்பட்டு, இடைப்பட்ட பகுதிகள் பட்டா நிலம் என்பதால் விடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கால்வாய் வாயிலாக வரும் கழிவுநீர், வெளியேற வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக, அத்தெருவை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் புகார் கூறுகின்றனர்.எனவே, கழிவுநீரை வெளியேற்ற புதிய கால்வாய் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புளியம்பாக்கம்கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை