சாலவாக்கம் --டூ உத்திரமேரூர் நேரடி பஸ் வசதி தேவை
உத்திரமேரூர்;சாலவாக்கத்தில் இருந்து, உத்திரமேரூருக்கு நேரடி அரசு பேருந்து சேவையை துவக்க, சாலவாக்கம் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில், சா லவாக்கம் உட்பட 73 கிராமங்கள் உள்ளன. அதில், 35க்கும் மேற்பட்ட கிராமங்கள், சாலவாக்கத்தை சுற்றி அமைந்துள்ளன. இந்த கி ராமங்களைச் சேர்ந்த மக்கள், தாலுகா அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம், மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்ல, தினமும் உத்திரமேரூருக்கு செல்கின்றனர். அவ் வாறு செல்லும் மக்கள், சாலவாக்கத்தில் இருந்து உத்திரமேருக்கு நேரடி பேருந்து இல்லாததால், சாலவாக்கம் கூட்டுச்சாலைக்கு சென்று பேருந்து பிடித்து உத்திரமே ரூருக்கு செல்கின்றனர். இதனால், மக்களுக்கு கூடுதல் நேரமும் அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல, திருப்புலிவனத்தில் செயல்படும் அரசு கலை கல்லுாரிக்கு செல்ல, சாலவாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் படிக்கும் மாணவ --- மாணவியரும் பேருந்து வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சாலவாக்கம் சுற்றுவட்டார கிராமத்தினர் கூறியதாவது: சாலவாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர் 20 கி.மீ.,ல் உள்ளது. பேருந்து வசதி இல்லாததால், உத்திரமேரூருக்கு செல்ல ஒருநாள் செலவிட வேண்டியுள்ளது. எனவே, சாலவாக்கத்தில் இருந்து, திருப்புலிவனம் வழியே தினமும் காலை, மாலை இரு வேளைகளில் அரசு பேருந்து இயக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.