உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில், முருகன் கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற இத்தலம், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.இக்கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலில், ஐந்தடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து, விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !