மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் பெண் மருத்துவர் பிரிவு, ஏ4 மருத்துவமனையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கான கருத்தரங்கம், பெண்கள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சசிகலா தலைமையில் நடந்தது.டாக்டர் தான்யகுமார் வரவேற்றார். பெண்கள் மருத்துவ பிரிவு செயலர் டாக்டர் காஞ்சனா முன்னிலை வகித்தார். இதில், ஏ4 மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அருணா அசோக், தொடர் கருச்சிதைவு மற்றும் கருப்பை உள்நோக்கி பரிசோதனை குறித்தும், டாக்டர் தாமரை, நவீன கருவூட்டல் முறை குறித்தும் கருத்தரங்க உரையாற்றினர்.நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், துணை புரவலர் டாக்டர் விக்டோரியா துணை தலைவர் டாக்டர் நிஷாப்ரியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.